2027 ஆம் ஆண்டுக்குள் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் ஏர்போட்களை அறிமுகப்படுத்தவுள்ள ஆப்பிள்
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள், தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது. மொத்த வருவாயில் 10% ஆப்பிள் வாட்ச், ஏர்போட்ஸ் போன்ற அணியக்கூடிய சாதனங்கள் மூலம் பெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆப்பிள், அணியக்கூடிய சாதனங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் அறிமுகமான ஆப்பிள் விஷன் ப்ரோ சாதனம் 2023 இல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. சுற்றுப்புறங்களை ஸ்கேன் செய்து, சூழலின் தகவல்களைச் சேகரிக்க உதவும் Visual Intelligence தொழில்நுட்பம் இச்சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில், ஆப்பிள் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டில் Second Generation Vision Pro ஹெட்செட்களை அறிமுகப்படுத்தவும், 2027 ஆம் ஆண்டில் AI தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் கேமரா கொண்ட ஏர்போட்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிளின் மேம்பட்ட புதிய சாதனங்கள்
ஆப்பிளின் விஷன் ப்ராஜெக்ட் குழு தொடர்ந்து புதிய ஹெட்செட்கள் மற்றும் அணியக்கூடிய சாதனங்களை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்கள் அறிமுகமான பிறகு, நிறுவனம் ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்குவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த புதிய ஸ்மார்ட் கண்ணாடிகள் சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன:
- ஒருங்கிணைந்த ஸ்பீக்கர்கள்
- உடல் சுகாதாரத்தை கண்காணிக்கும் சென்சார்கள்
- சுற்றுச்சூழலை அடையாளம் காணக்கூடிய கேமராக்கள்
- மேம்பட்ட AI தொழில்நுட்பம்
இதன் மூலம், மெட்டா நிறுவனத்தின் ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் அமேசானின் எக்ஸோ ப்ரேம்கள் போன்றவற்றுக்கு ஆப்பிள் திறமையான போட்டியாக மாறும்.
கண்ணாடி அணிய விரும்பாதவர்கள் மேம்பட்ட ஏர்போட்கள் பயன்படுத்தலாம் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. இவை:
- சுற்றுச்சூழலை புரிந்து கொள்ள உதவும் அகச்சிவப்பு (IR) கேமரா சென்சார்கள்
- ஸ்பேஷியல் ஆடியோ போன்ற புதிய தொழில்நுட்பங்கள்
- உடல் நிலையை கண்காணிக்கும் திறன்களும் கொண்டிருக்கின்றன
எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் நவீன சாதனங்கள், Visual Intelligence தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இந்த சாத்தியமான சாதனங்கள் உலக மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவையானவை, எளிதில் அணியக்கூடியவை மற்றும் பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளன.
அதிகாரபூர்வமாக இவற்றின் முழுமையான விவரங்களை ஆப்பிள் வெளியிடவில்லை என்றாலும், 2027ம் ஆண்டுக்குள் இவை உலக சந்தையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்பத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக இது குறிப்பிடத்தக்கதாக அமையும், இதன்மூலம் அன்றாட தொழில்நுட்ப பயன்பாட்டில் பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என நம்பப்படுகிறது.
ஆப்பிள் 2027 வருடம் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் ஏர்போட்களை அறிமுகம்.. விரிவான பார்வை