கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் வாங்கி சிகிச்சை பெற்று வந்த 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் அண்ணாமலையிடம் கதறி அழுதனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கள்ளச்சாராயம் குத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார். மேலும், இறப்பு எண்ணிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னிடம் கேட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், மாவட்ட தலைநகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கும் வரை தமிழக அரசு தூங்கிக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.