முதல்வர் M K Stalin அவர்களே,
வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நேற்று மாலை செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தாங்கள், ஊரடங்கை ஒருசிலர் மதிப்பதில்லை என்று வேதனைபடுவதாக செய்தியில் கூறி இருந்தார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயம் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சென்ற ஆண்டு சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டத்தை பற்றிய பய உணர்வை இஸ்லாமியர்களிடம் ஏற்படுத்த பல போராட்டங்களை செய்தீர்கள்.
ஒரு சட்டத்தை எதிர்ப்பது என்பது எல்லா எதிர் கட்சிகளும் செய்வது தான். அதில் தவறல்ல.
ஆனால், தாங்கள் ஒருபடி மேலே போய், இஸ்லாமியர்களின் போராட்டங்களை தூண்டி விட்டதோடு அல்லாமல், அவர்களின் போராடிய இடங்களுக்கே நேராக சென்று கூறியதை ஒரு முறை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
‘சட்டத்தை நிறைவேற்றினாலும், நீங்கள் அந்த சட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்புக் கொடுக்காதீர்கள். கணக்கெடுப்பு நடத்தும் போது ஒத்துழைப்பை வழங்காதீர்கள்’ என்று கூறினீர்களே, நினைவிருக்கிறதா?
ஒரு சட்டத்தை எதிர்த்து அரசியல் செய்வது என்பது வேறு. அந்த சட்டத்தையே மதிக்காதீர்கள், மீறுங்கள் என்று மக்களை தூண்டி விடுவது என்பது வேறு.
அன்று நீங்கள் செய்ததை, இன்று உங்கள் ஆட்சி நடைபெறும் போது மக்கள் செய்கிறார்கள். இது நீங்களாக வரவழைத்துக் கொண்டது தான்.
இதற்கு பெயர் தான் கர்மா. அதை அனுபவித்தே ஆக வேண்டும். இன்னும் ஐந்து வருடங்கள்(ஐந்து வருடங்கள் உங்கள் ஆட்சி நிலைத்தால்) நீங்கள் செய்தது அனைத்தும் உங்களுக்கு எதிராக திரும்பும்.
எதிர்கொள்ள தயாராக இருங்கள். கர்மா, யாரையும் விடுவதில்லை. நன்றி. வணக்கம்.