புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சரவை அமைவதில் தொடர் இழுபறி நிலவி வந்த நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் பதவி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை பெற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு மற்றும் நியமன எம்எல்ஏக்கள் மூலம் பாஜகவின் பலம் 12ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் பாஜக பங்கீடு கேட்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சரவை அமைக்கப்படாமல் தொடர் இழுபறி நிலவி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் நமச்சிவாயம் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு மூன்று நாள்களில் அமைச்சரவை பதவியேற்கும் எனவும் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: கோவில் நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் பணி நியமனங்கள் இந்த வழக்கு, மத அடிப்படையில் பணி நியமனங்களை சட்டரீதியாக உணர்ந்து தீர்மானிக்க...
மதுரை ஜில்லா உசிலம்பட்டி தாலுகா நல்லுதேவன்பட்டியிலிருந்து ராசுத்தேவர் மகன் விருமாண்டி அவர்களின் கடிதம்: கஞ்சா வியாபாரம் மற்றும் கல்வி ஊழல் சம்பந்தமான விளக்கம் 28.10.2024 அன்று, மதுரை...
உத்தவ் தாக்ரே மற்றும் அவரது சிவசேனாவின் வீழ்ச்சி என்பது, மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் சுவாரஸ்யமான திருப்பமாகவும் முக்கியமான பாடமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சியை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள,...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தெரிவித்தது போல, தற்போது தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடங்களில் திராவிட வரலாறு மற்றும் சமூக...
ஜார்க்கண்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர், காங்கிரஸ் கட்சியையும், அதன்...