நடிகை குஷ்புவை தனது மகளாகவே கருதி திமுகவில் அதிக இடம் கொடுத்தார் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. தமிழகம் முழுவதும் சுற்றி திமுகவுக்கு தீவிர பிரச்சாரம் செய்து வந்தார் குஷ்பு. அடுத்த கட்ட தலைவராவதற்கு குஷ்புவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிற அவா கருணாநிதியிடமும் இருந்தது. கட்சியில் முக்கிய பொறுப்பு அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், திமுகவில் சிலர் காட்டிய எதிர்ப்பால் அவர் கட்சியை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தார். அங்கிருந்து இப்போது பாஜகவுக்கு சென்றுவிட்டாலும், கருணாநிதி இல்லாத வெற்றிடத்தை நினைக்காத நாளில்லை என்கிறார் குஷ்பு. கருணாநிதியின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜக பிரமுகரான குஷ்பு, ”நீங்கள் இல்லாத வெற்றிடத்தை நான் உணராத நாள் இல்லை. ஒரு நாள் கூட தவறாமல் அதை நினைக்கிறேன். ஒரு குரு என்பவர் கடவுளுக்கு மேலே. நீங்கள் என் சிறந்த ஆசிரியராக இருந்தீர்கள்.
உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன். மிஸ் யூ அப்பா.”என்று குறிப்பிட்டிருக்கிறார் குஷ்பு. There isn’t a single day when I don’t feel the vaccum. A Guru is above GOD. And you have been my best teacher.
I am sure your blessings will always be showered upon me. Miss you Appa.. #DrKalaignar #HBDKalaignar98 pic.twitter.com/kWmXJf0ogf – KhushbuSundar (@khushsundar) June 3, 2021 இதற்கு கருத்து தெரிவித்துள்ள திமுக அனுதாபிகள், ”திமுக வில் இருந்திருந்தால் ஒருவேளை நீங்கள் இப்போது சமூகநலத்துறை அமைச்சராகி கூட இருந்திருக்கலாம். “செஞ்சோற்றுக் கடன்” தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த குஷ்புவே..! இப்போது இருக்கும் கட்சி மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட வஞ்சகமே நெஞ்சகமாய் வாழும் கீழ்மை மனிதர்களின் கலவையில் உருவானது. அங்கு பகட்டு இருக்கும். மனிதப் பண்பு இருக்காது. சகோதரி, விரைவில் வெளியேறு” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: கோவில் நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் பணி நியமனங்கள் இந்த வழக்கு, மத அடிப்படையில் பணி நியமனங்களை சட்டரீதியாக உணர்ந்து தீர்மானிக்க...
மதுரை ஜில்லா உசிலம்பட்டி தாலுகா நல்லுதேவன்பட்டியிலிருந்து ராசுத்தேவர் மகன் விருமாண்டி அவர்களின் கடிதம்: கஞ்சா வியாபாரம் மற்றும் கல்வி ஊழல் சம்பந்தமான விளக்கம் 28.10.2024 அன்று, மதுரை...
உத்தவ் தாக்ரே மற்றும் அவரது சிவசேனாவின் வீழ்ச்சி என்பது, மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் சுவாரஸ்யமான திருப்பமாகவும் முக்கியமான பாடமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சியை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள,...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தெரிவித்தது போல, தற்போது தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடங்களில் திராவிட வரலாறு மற்றும் சமூக...
ஜார்க்கண்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர், காங்கிரஸ் கட்சியையும், அதன்...