பாஜகவின் விமர்சனத்திற்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம் …. பதற்றத்தில் அமைச்சர் கே.என். நேரு… We will not respond to the BJP’s criticism …. Minister K.N.Nehru in tension
“பா.ஜ.க’வினரின் விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல மாட்டோம். எங்கள் செயல்பாடுகள் பதில் அளிக்கும்” என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது, “18 முதல் 44 வயதுகுட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசிகளைத் தமிழக அரசு கொள்முதல் செய்து வழங்குகிறது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசுதான் வழங்குகிறது.
இதன்படி, புதுக்கோட்டைக்கு 1.40 லட்சம், திருச்சிக்கு 52 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டன. புதுக்கோட்டையைவிடத் திருச்சி பெரிய மாவட்டம். எனவே கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு கேட்டுள்ளோம்” என்றார்.
மேலும் பா.ஜ.க’வினரை பற்றி குறிப்பிட்ட கே.என்.நேரு, “தேர்தலில் எங்களை எதிர்த்து பா.ஜ.க’வினர் போட்டியிட்டனர். அவர்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. பொதுமக்கள் எங்களைத்தான் தேர்வு செய்தனர். எனவே, அவர்கள் எங்களை வாழ்த்த மாட்டார்கள். எங்களை விமர்சனம்தான் செய்வார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் மக்களுக்குப் பணியாற்றி நல்ல பெயர் எடுக்க வேண்டும். அவர்களுடைய விமர்சனங்களுக்கு நாங்கள் பதில் சொல்ல மாட்டோம். எங்கள் செயல்பாடுகள் பதில் அளிக்கும். மக்களுடன்தான் நாங்கள் இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறிக்கொண்டே இருக்க முடியாது” என கூறினார்.
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
இஸ்ரோ தலைவராக நியமனம் – யார் இந்த வி.நாராயணன்? இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முக்கிய சாதனைகளை தொடர்ச்சியாக செய்து வருவதாக பல உலக நாடுகளால்...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
பாரதி கலைக் குழுவினர் நடத்தும் மாபெரும் நகைச்சுவை பட்டிமன்றம் தலைப்பு:"வளரும் பாரதத்தை மலரவைப்பது ஆண்களா...? பெண்களா...?" இந்த தலைப்பு வழியாக, சமூகத்தின் இரு முக்கிய தூண்களாகிய ஆண்களும்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: கோவில் நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் பணி நியமனங்கள் இந்த வழக்கு, மத அடிப்படையில் பணி நியமனங்களை சட்டரீதியாக உணர்ந்து தீர்மானிக்க...
மதுரை ஜில்லா உசிலம்பட்டி தாலுகா நல்லுதேவன்பட்டியிலிருந்து ராசுத்தேவர் மகன் விருமாண்டி அவர்களின் கடிதம்: கஞ்சா வியாபாரம் மற்றும் கல்வி ஊழல் சம்பந்தமான விளக்கம் 28.10.2024 அன்று, மதுரை...