காவல்நிலையத்திற்கே சென்று மீட்ட அதிமுக நிர்வாகி… கல்யாண ராமனை இனியாவது மீட்டு கொண்டுவர பாஜக முயற்சி செய்யுமா…. AIADMK executive who went to the police station and rescued … Will BJP try to bring back Kalyana Ramana ….
கருணாநிதி பிறந்தநாளின் போது கருணாநிதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக திமுகவினர் அளித்த புகாரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார், இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதுதான் தாமதம்.
உடனடியாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் நேரடியாக வழக்கறிஞர்கள் உடன் காவல்நிலையம் சென்று கைது செய்யபட்ட அதிமுக நிர்வாகியை மீட்டு கொண்டுவத்துள்ளனர் அதிமுக நிர்வாகிகள் இது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
தொண்டர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இயங்களில் மட்டுமே தொண்டர்கள் முழு மூச்சில் செயல்பட விரும்புவார்கள், குறிப்பாக பாஜகவில் வழக்கறிஞர் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிலரை மீட்டு கொண்டுவந்து உள்ளது, குறிப்பாக கார்ட்டூனிஸ்ட் வர்மாவை சட்ட போராட்டம் நடத்தி மீட்டு கொண்டுவந்தது உள்ளிட்ட சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
ஆனால் சாதாரண தொண்டர்கள் காப்பாற்ற படுகிறார்களா என்பது கேள்விகுறிதான் இது ஒருபுறம் இருக்க.. பாஜக நிர்வாகி கல்யாண ராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை அவரை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தது தமிழக பாஜக என்பது தெரியவில்லை.
பிரதமர் மோடி குறித்து வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பிய ஜெயரஞ்சனுக்கு தமிழ்நாடு மாநில வளர்ச்சி குழுவில் துணை தலைவர் பதவி வழங்கியுள்ளது திமுக, ஆனால் பாஜக நிர்வாகி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்திற்கு எதிராக இதுவரை எந்த பாஜக தலைவர்கள் வாய் திறந்தார்கள் என்றால் இதுவரை ஒன்றும் இல்லை.
மேல்மட்ட பொறுப்பில் இருந்தவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண நிர்வாகிகள், தொண்டர்களின் நிலை என்னவாகும் என்ற இயல்பான சந்தேகம் பாஜகவினர் மனதில் எழுந்துள்ளது, தமிழக பாஜக வழக்கறிஞர் அணி தொண்டர்களை காப்பாற்ற களத்தில் இறங்குமா? இல்லை தொண்டர்களே சொந்த முயற்சியில் இன்னல்களை எதிர்கொள்ளுமா என்பது வரும் காலத்தில் தெரியவரும்.
சாதாரண நிர்வாகி ஒருவரை மீட்டு கொண்டுவர அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நேரடியாக களத்தில் இறங்கி வெற்றிகண்ட நிலையில் இணையாவது தமிழக பாஜக திமுகவினை எதிர்த்து அரசியல் கருத்துக்கள் தெரிவிக்கும் தொண்டர்களை காப்பாற்ற முன் வருமா? என்ற கேள்வியை மாநில நிர்வாகிகளை நோக்கியே வைக்கலாம்.
கல்யாண ராமனை இனியாவது மீட்டு கொண்டுவர பாஜக முயற்சி செய்யுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ்ப் புத்தாண்டில் பஞ்சாங்கம் படியுங்கள் – பாரம்பரியமும் பண்பாடும் இணையும் ஒளிக்கிழி தமிழர்களின் பாரம்பரியம் என்பது காலம் கடந்தும் அழியாதது. காலத்தால் சோதிக்கப்பட்டு பல தலைமுறைகள் அனுசரித்துவரும்...
குற்றிங்கல் தர்மசாஸ்தா கோயிலில் நடைபெற்ற இந்து சமய மாநாடு – ‘இந்துக்களே கண் விழிக்க வேண்டும்’ என வலியுறுத்தல் கன்யாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குற்றிங்கல் தர்மசாஸ்தா...
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
இஸ்ரோ தலைவராக நியமனம் – யார் இந்த வி.நாராயணன்? இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முக்கிய சாதனைகளை தொடர்ச்சியாக செய்து வருவதாக பல உலக நாடுகளால்...