சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை நேரில் சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பூசியும், கருப்பு பூஞ்சை நோயிற்கான Liposomal Amphotericin B மருந்தையும் தமிழகத்திற்கு அதிக அளவு வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
வானதி சீனிவாசனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கருப்பு பூஞ்சை நோயிற்கான மருந்தை தமிழகத்திற்கு 3840 ஆக உயர்த்தி வழங்கியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தை தமிழகத்திற்கு 3840 என உயர்த்தி அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி.” என்று அவர் கூறினார்.