நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பிரச்சனை, புயல் சேதங்கள், கோயில் தீ விபத்து ஆகிய பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மக்களுக்காக தனது பணியை தவறாமல் செய்து கொண்டு வருகிறார். தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல், காலில் செருப்பு கூட அணியாமல் அந்த தொகுதிக்காக செயல்பட்டு வருகிறார்.
நேற்று தம்மத்துக்கோணம் குருகுலம் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அப்பகுதியை நேரில் பார்வையிட்ட பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அவர் கூறியது போல் இன்று அந்த சாலை சீரமைப்பு பணி நடந்து கொண்டு இருக்கிறது.
அதே போல் இன்று புத்தேரி நெடுங்குளம் ஷட்டர் பழுதடைந்த நிலையில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இன்று அதை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க படும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து இன்று முருங்கவிளை ஊரில் இயங்கி வரும் யூனிக் வாரியர்ஸ் அறக்கட்டளை சார்பாக காலை ராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் ஒன்றை எம்.ஆர். காந்தி வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் என்றாலே சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை, பணம் சம்பாதிக்கும் தன்மை இவ்வாறு பெரும்பாலானோர் இருப்பவர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக, மக்களுக்கு பணியாற்றி, மக்கள் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைக்கும் எம்.ஆர். காந்தி இந்த கால இளைஞர்களுக்கும், வருங்கால அரசியல் வாதிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.