மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி பார்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிறப்பித்துள்ளார், பார்த்ருஹரி மஹ்தாப் யார்? பின்னணி என்ன? முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
லோக் சபா சபாநாயகர் லோக் சபா பிஜேபி
அதாவது மத்தியில் தனித்து ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 272 எம்.பி.க்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதன் மூலம் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 52 எம்பிக்களின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. நரேந்திர மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 2 கேபினட் அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பதற்கான பார்லிமென்ட் கூட்டமும் ஜூன் 23ம் தேதி நடக்கிறது.எம்.பி.க்கள் பதவியேற்க இடைக்கால சபாநாயகரை நியமிப்பது வழக்கம். அதன்படி, இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி பார்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிறப்பித்துள்ளார்.
இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பார்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களும் மக்களவையில் பதவியேற்பார்கள். இதற்கிடையில், பார்த்ருஹரி மஹ்தாப் யார்? அவருடைய பின்னணி என்ன? முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தாப் ஒடிசாவை சேர்ந்தவர். இவர் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் செயல்பட்டார். இவர் கட்டாக் தொகுதி எம்.பி. 1998 முதல் கட்டாக் தொகுதியில் இருந்து எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பிஜு ஜனதா தளம் கட்டாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன்பிறகு, சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, பிஜு ஜனதா தளத்திலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். கட்டாக் தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனார்.
மக்களவை சபாநாயகராக 7வது முறையாக எம்.பி.யாக இருக்கும் பார்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், பாஜக தனித்து ஆட்சியமைக்காமல் மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. மற்ற கட்சியில் இருந்து வந்த பார்த்ருஹரி மஹ்தாபுக்கு சபாநாயகர் பதவியை வழங்க வேண்டாம் என பாஜக மேலிட தலைவர்களில் ஒரு பிரிவினர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான் மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பார்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு லோக்சபா சபாநாயகர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படும் பெரும்பாலானவர்கள் 5 வருடங்களாக நிரந்தர சபாநாயகராக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.