3வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, இன்று முறைப்படி பதவியேற்ற பிறகு முதல் கோப்பில் கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு எது தெரியுமா?
விவசாயிகளுக்கான முதல் நிதி ஒதுக்கீடு கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 9.2 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். 20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி இன்று கையெழுத்திட்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ., இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று மாலை பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி பதவியேற்றார். பொறுப்பேற்ற பிறகு முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டு தனது உத்தியோகபூர்வ பணிகளை தொடங்கினார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 ஒதுக்கீடு செய்யும் கோப்பில் பிரதமர் மோடி முதலில் கையெழுத்திட்டார்.
3வது முறையாக எந்த கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், கிசான் நிதி திட்டத்திற்கு ரூ.20,000 கோடி நிதியை வெளியிட கோப்பில் பிரதமர் அவர் முதல் கையெழுத்து போட்டார்.
பிரதம மந்திரி கிசான் நிதித் திட்டம் என்பது மத்திய வேளாண் துறையின் கீழ் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கும் திட்டமாகும். ஒவ்வொரு தவணையிலும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, தனது கையொப்பமாக இத்திட்டத்திற்கு 17வது தவணையாக ரூ.20,000 கோடி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சியில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தீவிர போராட்டம் நடத்தினர். ஆனால், மோடி தலைமையிலான அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.
விவசாயிகள் மரணங்கள், விவசாயிகள் போராட்டங்கள் போன்றவை வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இம்முறை பாஜகவால் பெரும்பான்மை பெற முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி, தனது புதிய அரசு விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்ற அறிக்கையாக பிரதமர் கிசான் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல் கையெழுத்து போட்டுள்ளதாக கூறப்படுகிறது. .
முதல் கையெழுத்துக்குப் பிறகு பிரதமர் மோடி பேசுகையில், “வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்காக நாங்கள் கடுமையாக உழைக்க விரும்புகிறோம். “விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட எங்கள் அரசு முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.