பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்சி செய்யும் அரசை தேர்வு செய்வதற்காக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது.
இதில், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 543 தொகுதிகளில் 240 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. புதிய ஆட்சி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை கூட்டணியும் தொடங்கியது.
பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இந்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் அந்த கட்சிகள் பிரதமர் மோடியை கூட்டணி தலைவராக தேர்வு செய்தன. இதையடுத்து பாஜ உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக (பிரதமர்) மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து, மோடியை பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தை அளித்தது.
மேலும், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதங்களையும் அவர்கள் ஜனாதிபதியிடம் வழங்கினர். இதையடுத்து மாலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அவரும் ஆட்சி செய்ய உரிமை கோரினார். இதை ஏற்று ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். ஜனாதிபதி அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பல்வேறு அண்டை நாடுகள் மற்றும் இந்திய பெருங்கடல் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.