மகாராஷ்டிர அரசில் ஏராளமான சூப்பர் முதல்வர் இருப்பதாக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசில் ஒரே ஒரு முதல்வர்தான் இருக்கிறார். ஆனால் ஏராளமான சூப்பர் முதல்வர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநில அரசின் மிக முக்கிய அறிவிப்புகளைக் கூட தன்னிச்சையாகவே வெளியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசில் இருக்கும் பல அமைச்சர்கள், தங்களைத் தாங்களே முதல்வர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி நினைத்துக் கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, முதல்வர்களாகக் காட்டிக் கொள்ள முனைகிறார்கள் என்றும் ஃபட்னவீஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொதுமுடக்கத்தை நீக்கிக் கொள்வது குறித்து அமைச்சர் விஜய் வதேட்டிவார் வெளியிட்ட அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஃபட்னவீஸ் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.