மேஷம்:
இன்று பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
இன்று சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும்.
மிதுனம்:
இன்று புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
கடகம்:
இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.
சிம்மம்:
இன்று வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
கன்னி:
இன்று வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளிக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.
துலாம்:
இன்று பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.
விருச்சிகம்:
இன்று நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு:
இன்று வெற்றிகளைக் குவித்து வாழ்வில் வசந்தம் வீசப் போகும் நாளிது. குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.
மகரம்:
இன்று சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும்.
கும்பம்:
இன்று நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும்.
மீனம்:
இன்று விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.