மேஷம்
மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தினருடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயர்அதிகாரி சில சூட்சுமங்களைப் சொல்லி தருவார். அமோகமான நாள்.
சிம்மம்
சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
கன்னி
கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனை பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
துலாம்
துலாம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள் .
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
தனுசு
தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
மகரம்
மகரம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
மீனம்
மீனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.