1)பன்றிக்கறியை படைத்து, தன் அன்பை வெளிக்காட்டிய ஒருவர்தான் நாயன்மார் ஆனார்.
2)பிடித்த மீன்களில் உயர்ந்த மீனை சிவனுக்கு தந்தே ஒருவர் நாயனார் ஆனார். (மீனவர் குளத்தில் பிறந்தவர் மீன் சாப்பிடாமலா இருந்திருப்பார்!!!!!)
3)மாட்டின் தோலை உறித்து வாத்திய கருவிகளை கோயிலுக்கு இனாமாக வழங்கியே, நந்தனார் நாயன்மார் ஆனார்.
4)சிவனடியார்களின் உடைகளை துவைத்து கொடுத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
5)சிவனடியார்களுக்கு அமுது படைத்தே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
6)சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்துதவியே, ஒருவர் சிவனடி சேர்ந்தார்.
7)சிவபெருமான் புகழை பாடியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
8)குங்கிலிய தூபம் போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
9)ஈசனை தவறாக பேசுபவர் நாவை வெட்டியே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
10)ஈசனுக்கு பூ பரித்து போட்டே, ஒருவர் நாயன்மார் ஆனார்.
ஆக…… சிவனடியார் என்பர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் நிபந்தனையும் கிடையாது.
ஈசனை நினைத்து எந்த செயல் செய்தாலும், அது சிவதொண்டே.
அன்பர்கள் எப்படி இருந்தாலும், ஈசன்மேல் அன்பாக இருந்தால்—-அவரே சிவனடியார்.
எதைவேண்டுமானாலும் செய்யுங்கள்….ஈசனை நினைந்து செய்யுங்கள். சிவபெருமானை நினைந்து செய்யும் எல்லா செயலும் சிவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
சிவனடியார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நால்வர் பெருமக்களோ நாயன்மார்களோ சொல்லவே இல்லை.
ஆக….. சிவனடியார் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் தகுதி, நம்மில் யாருக்குமே கிடையாது.
சிவத்தை நினைந்து செய்யும் ஒவ்வொரு செயலும் வழிபாடுதான். வாழ்வையே வழிபாடாக்கிய ஒவ்வொருவரும் சிவனடியார்தான்.
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய