திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி தொடங்கி, 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை போன்று, நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் ஏகாந்தமாக நடைபெற்று வருகிறது. இதில், காலை, இரவு என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.
முக்கிய நாளான நேற்று 5-ம் நாள் பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதில், காலையில் மோகினி அவதாரத்தில் ஒய்யாரமாக பல்லக்கில் கிருஷ்ணருடன் எழுந்தருளினார் மலையப்பர். சம்பங்கி மண்டபத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தேறியது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கருட வாகனத்தில் மலையப்பர் காட்சியளித்தார். சுமார் 2 மணி நேரம் வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.
Related