நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று உற்சவரான மலையப்பர் சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி தொடங்கியது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில், இம்முறை சுவாமியின் திருவீதி உலா ரத்து செய்யப்பட்டது.
இதனால், கோயிலுக்குள்ளேயே உற்சவர் மலையப்ப சுவாமி தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வருகிறார். இந்நிலையில், 7-ம் நாளான நேற்று காலையில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளினார். பின்னர் இரவில் சந்திரபிரபை வாகன சேவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தேவஸ்தான ஜீயர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.
Related