திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுமார் 45 நாட்களுக்குபிறகு நேற்று முதல் இலவசதரிசனம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதனால், சாமானிய பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே திருப்பதி அலிபிரி மலையடிவாரத்தின் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் பகுதியில் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து டிக்கெட்களை பெற்றுச் சென்றனர்.
தற்போது ஆன்லைன் மூலம் தினமும் 16 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர கல்யாண உற்சவம், விஐபி பிரேக், வாணி அறக்கட்டளை டிக்கெட் என தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால் இலவச டிக்கெட் 3,000 பக்தர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த டிக்கெட்பெற்ற பக்தர்கள் மறுநாள்தான் சுவாமியை தரிசிக்க இயலும். ஆதலால், டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு திருமலையில் தங்கும் அறைகள் வழங்கப்படுகின்றன.
சுமார் 45 நாட்கள் கழித்து இலவச தரிசன டிக்கெட்களை தேவஸ்தானம் விநியோகம் செய்வதால், திரளான பக்தர்கள்சுவாமியை தரிசிக்க அலைமோதுகின்றனர்.
இதனால் டிக்கட் விரைவாக தீர்ந்து விடுகிறது. எனவே, டிக்கெட்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந் துள்ளது.
Related