ஜார்க்கண்டில் உள்ள துர்கை கோவிலில் வேண்டினால், பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை, அந்த பகுதியில் உள்ளவர்களிடம் நிலவுகிறது. இந்த கோவிலுக்கு,தம்பதியர் வருகை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
பாலின வேறுபாட்டால், பிறப்பு முதல், இறப்பு வரை, பெண்கள் பல விதத்திலும் பாதிக்கப்படுகின்றனர். நம் நாட்டில் மட்டுமல்லாமல், பல நாடுகளிலும், இந்த வேறுபாட்டால், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தான், பெண்களை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளை படிக்க வைக்கவும், பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெண் குழந்தை பிறக்க வேண்டி, ஜார்க்கண்டில் உள்ள துர்கை கோவிலுக்கு, தம்பதியர் வருவது ஆச்சரியத்தைஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், போக்ராம் மாவட்டம், சாஸ் பகுதியில், சித்ததாத்ரி துர்கை கோவில் உள்ளது. இந்த அம்மனிடம், தம்பதியர் வேண்டினால், அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இந்த கோவிலில் உள்ள துர்கையை, பெண் குழந்தை அருளும் தெய்வமாக, பக்தர்கள் பார்க்கின்றனர்.கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்தாலும், நவராத்திரி காலத்தில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கையை வழிபட்டு பிரார்த்தித்தால், அடுத்த நவராத்திரியின் போது, வீட்டில் பெண் குழந்தை சத்தம் கேட்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...