அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னாபிஷேகம் எளிமையான முறையில் நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று 100 மூட்டை பச்சரிசியால் கோயில் வளாகத்திலேயே சாதம் சமைத்து பதிமூன்றரை அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு அபிஷேக ஆராதனை நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டு ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று நடைபெற இருந்த 36-வது அன்னாபிஷேகத்துக்கு கொரோனா பரவல் காரணமாக அரசு தடைவிதித்திருந்த நிலையில், அன்னாபிஷேகத்துக்கு பதிலாக அன்னக்காப்பு (அன்னம் சாற்றி அலங்காரம்) நடைபெற்றது.
51 கிலோ பச்சரிசியால் சமைக்கப்பட்ட சாதம் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, தஞ்சை பெரிய கோயிலில் 12 அடி உயர சிவலிங்கம், 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையார் கொண்ட ஒரே கல்லால் ஆன மூலவர் பெருவுடையாருக்கு 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கனிகள், இனிப்பு வகைகள், 250 கிலோ மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு நேற்று அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கடம்பாடியில் உள்ள மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாதங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கடம்பாடியில் உள்ள திருவதீஸ்வரர் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. கடம்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளசிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சில கோயில்களில் நேற்று முன்தினம் இரவும், சில கோயில்களில் நேற்று இரவும்அன்னாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கு வந்து சிவனை வழிபட்டனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறைகளுக்கு சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்படுவதற்கான ஒரு முக்கிய முடிவாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வங்க தேச இந்துக்கள் மீதான...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: கோவில் நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் பணி நியமனங்கள் இந்த வழக்கு, மத அடிப்படையில் பணி நியமனங்களை சட்டரீதியாக உணர்ந்து தீர்மானிக்க...
உத்தவ் தாக்ரே மற்றும் அவரது சிவசேனாவின் வீழ்ச்சி என்பது, மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் சுவாரஸ்யமான திருப்பமாகவும் முக்கியமான பாடமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சியை மேலும் ஆழமாக புரிந்துகொள்ள,...
சபரிமலை - எரிமேலி பாபர் சமாதி விவாதம் சபரிமலை ஐயப்பன் கோயில், இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் தெய்வீக புனிதத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள்...
தருமபுத்திரர், அறநெறி சிறிதும் தவறாதபடி, பல்லுயிர்களும் மகிழ்ச்சி யுடன் வாழும்படி, தன் அரசாட்சியைத் தன்னிகரற்ற தன் வெண்கொற்றக் குடை யின் கீழ் இருந்து, உலகினைப் பாதுகாத்து வந்தார்....