அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ள வளாகத்தில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் பற்றி கோவிலை கட்டும் அறக்கட்டளை, மக்களிடம் ஆலோசனை கேட்டு உள்ளது.
உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளை ஒன்றை, மத்திய அரசு அமைத்தது.
இந்த அறக்கட்டளை, கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட், 5ம் தேதி, ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இப்போது, அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அயோத்தியில், ராமர் கோவில் சுற்றி உள்ள, 70 ஏக்கர் நிலத்தையும் பக்தர்கள் வசதிக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவில் வளாகத்தில், நுாலகம், குருகுல பள்ளி, அருங்காட்சியகம், கோசாலை, யாத்ரீகர்கள் தங்குமிடம் உட்பட பல வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வசதிகளை எப்படி கட்டலாம், மேலும், வேறு என்ன வசதிகள் செய்யலாம் என்பது பற்றி, மக்களிடம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. ஆலோசனைகள் அனைத்தும், வாஸ்து மற்றும் சிற்ப சாஸ்திரத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆலோசனைகளை, நவ., 25க்குள், அறக்கட்டளைக்கு, ‘இ – மெயில்’ வழியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தருமபுத்திரர், அறநெறி சிறிதும் தவறாதபடி, பல்லுயிர்களும் மகிழ்ச்சி யுடன் வாழும்படி, தன் அரசாட்சியைத் தன்னிகரற்ற தன் வெண்கொற்றக் குடை யின் கீழ் இருந்து, உலகினைப் பாதுகாத்து வந்தார்....
இராமாயணம் இதிஹாசம் ஏற்றிய வால்மீகி பண்டைக் காலத்தில் நம் நாட்டிலே முற்றிலும் பண்பாடு அடைந்துள்ள மேன்மகன் ஒருவனை ரிஷி என்று அழைப்பது வழக்கம். அந்த இலட்சியம் மங்கிப்...
மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பேயாழ்வாரின் தெய்வீக வரலாறு பற்றிய இந்த விவரிப்பு மிகவும் செழுமையானது. இந்த கோவிலின் தொன்மையும், ஆழ்வார்களின் புனித இடமாகவும் மயிலாப்பூரின்...
இந்தியாவின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் தற்காலிகப் பொறுப்புகளைச் சிக்கலற்றதாக மாற்றும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய ராணுவம் ஹெச்.ஏ.எல் (Hindustan Aeronautics...
பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக திருச்சி எஸ் சூர்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் விவகாரமே அவர்...