சனி பகவானை வணங்கினால், சனி கிரகம் மட்டுமின்றி மற்ற கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். நமக்கு ஏற்படுகிற அனைத்து சங்கடங்களையும் கஷ்டங்களையும் இன்னல்களையும் போக்கி அருளுவார் சனீஸ்வரர்.
‘சனியைப் போல் கொடுப்பாருமில்லை; சனியைப் போல் கெடுப்பாருமில்லை’ என்பார்கள். அந்த அளவுக்கு சனி பகவான் நல்லவைகளும் செய்யக்கூடியவர். துன்பங்களையும் கொடுக்கக் கூடியவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நவக்கிரகங்களில் மிக மிக வலிமையான கிரகம் என்று போற்றப்படக் கூடியவர் சனி பகவான். ராகு – கேது பெயர்ச்சி வரும். அதற்குக் கூட அவ்வளவாக கலங்கித் தவிக்கமாட்டோம். குருப் பெயர்ச்சி வரும். அதற்கும் பதறித் துடிக்க மாட்டோம். ஆனால், சனிப்பெயர்ச்சி வந்துவிட்டாலே, சனீஸ்வரர் நமக்கு என்ன செய்யப் போகிறார், நல்லது நடக்குமா, தடைகள் அனைத்தும் அகலுமா, இதுவரை இருந்து கஷ்டங்களும் நஷ்டங்களும் விலகிவிடுமா என்றெல்லாம் நெஞ்சில் கைவைத்து கண் மூடி வேண்டிக்கொள்வோம்.
சனீஸ்வரர் என்பவர், நீதிபதியைப் போலானவர். தராசு முனை போல் தீர்ப்பு சொல்லக்கூடியவர். தீர்ப்பை சொல்வது மட்டுமின்றி, அதற்கான தண்டனைகளையும் சரியாக வழங்கக் கூடியவர். அதனால்தான் அந்தத் தண்டனையைக் கண்டு அஞ்சுகிறோம்.
அதேசமயம், சனி கிரக தோஷம் உள்ளவர்கள் சனி பகவானை உரிய முறையில் சனீஸ்வரரை தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், பிரார்த்தனை செய்து வந்தால், சனி பகவானின் அருளைப் பெறலாம். கிரக தோஷ பாதிப்பில் இருந்து காத்தருள்வார்.
சனீஸ்வரருக்கு, திருநள்ளாறு திருத்தலம் உள்ளது. திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் பொங்கு சனீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பது விசேஷம். அதேபோல், தேனி மாவட்டத்தில் குச்சனூர் சனீஸ்வரரை தரிசிப்பதும் மிகுந்த பலன்களைத் தரும்.
மேலும் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, நவக்கிரகத்தை வலம் வந்து வேண்டிக்கொள்வதும் தினமும் காகத்துக்கு சாதம் வைப்பதும் எள் கலந்த சாதம் வைப்பதும் பாவங்களை நீக்கி புண்ணியங்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சனி கிரக பாதிப்பு இல்லாதவர்களும் கூட ‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரெளம் ஷக் சனைச்சராய நம;’ எனும் மந்திரத்தை சனிக்கிழமைகளிலும் மற்ற நாட்களிலும் கூட தினமும் சொல்லி வந்தால், சனீஸ்வரர் நம்மைக் காத்தருள்வார். தடைகளைத் தகர்த்து அருளுவார். வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் தந்து காத்தருளுவார்.
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....
18 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துவாரகா கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியுள்ள கிருஷ்ணரின் கர்ம பூமியைக் கண்டறியும் முயற்சியின்...
ஸநாதனம் – ஒரு சவால்… எழுதியவர் சுவாமி சைதன்யானந்தர் (1) ஸநாதனம் - ஒரு சவால் தொடர்ச்சி... அறிவிலிகள் கூறும் ஸநாதனம் ஆனால், அதிமேதாவிகள் எனத் தங்களைத்...
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...