சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் 15-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் 16 ஆம் தேதி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்தது. இதன் முக்கிய விதிமுறையாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா இருப்பின் அவர்கள் அங்கேயே தங்கி சிகிச்சை பெறவும் அல்லது அவர்களின் விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்கள்
முன்னதாக 48 மணி நேரத்துக்கு முன்பாக சோதனை எடுத்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அது 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.