குரு பார்த்தால் கோடி நன்மை! குரு பார்த்தால் தெருக்கோடி என்கிற பழமொழிகள் பல காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. ஏன் குருவுக்கு மட்டும் அப்படி ஒரு தனிச்சிறப்பு என்பதுதான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.
சனிப்பெயர்ச்சி என்றால் மக்கள் பயந்து கொண்டே கேட்பார்கள். அதுபோல, ராகு கேது பெயர்ச்சி என்றால் தடுமாற்றத்துடன், தயக்கத்துடன் கேட்பார்கள். ஆனால் குருபெயர்ச்சி என்ன நல்லது நடக்கும் என்று அர்த்தம் தெரிந்தாலும், அது எப்படி நடக்கும் என்பதை யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. அந்த ஆர்வம்தான் செய்திகளிலும், ஊடகங்களிலும் குருபெயர்ச்சி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் ஆர்வத்தை தூண்டுகிறது.
இந்த பூமியில் உயிர் பெருக்கத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு பகவான். அதனால்தான் குரு பகவானை அனைத்தையும் கொடுக்கும் அதிபதி என்கிறார்கள். உயிரினங்கள் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பவர் அவர். தோற்றுவிப்பவர் மட்டுமல்ல, அவற்றின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் செய்பவர் குருபகவான். மனிதர்களுக்கு தேவையான செல்வங்கள், சன்மானங்கள் என அத்தனையும் கொடுப்பவர். அதனால்தான் குரு பெயர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். எந்த கெடுதலையும் செய்யாதவர் குருபகவான்.
ஒன்பது கோள்களில் குருபகவானை மட்டுமே சுபக்கிரகம் என்று அழைக்கிறோம். அப்படியாக குரு அடுத்த கட்டத்துக்கு நகர்வதை குருபெயர்ச்சி என்கிறோம்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 15 .11 .2020 அன்று குரு பெயர்ச்சி தொடங்குகிறது. அதிலிருந்து ஐந்து நாட்களுக்கு பிறகு 20.11. 2020 அன்று திருக்கணித பஞ்சாங்க முறைப்படி குரு பெயர்ச்சி அடைகிறார்.
இதுவரையில் தனுஷில் இருந்த குருபகவான், தனது சொந்த வீட்டில் இந்ந்து மகரத்துக்கு செல்கிறார். மகரத்து செல்லும் குருபகவான் 12 ராசிகளுக்கும் சிறந்த பலன்களை அளிப்பார் என்பதே குருபகவானின் சிறப்பு.