இவ்வாறு (சொர்க்கவாசல்) பரமபதவாசல் திருநாள் வைபவம், பகல்பத்து உற்சவம் இராப்பத்து உற்சவம் என 21 நாள்கள் நம் பெருமாளுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. இவ்வளவு புகழ்வாய்ந்த இந்த உற்சவம் நமது உடுமலை மாநகரில் ஶ்ரீ நவநீத கிருஷ்ணன் ஸ்வாமி கோவிலில் இவ்வருடம் (ஶ்ரீ விகாரி வருடம்)26.12 முதல் 16.01 வரை நடைபெற வேண்டுமாய் பெருமாள் திருவுள்ளம் பற்றியுள்ளார். இதனை கண்டும் கேட்டும் ஆனந்தப்பட வேண்டுமாய் பக்த மஹா ஜனங்கள் அனைவரையும் அன்புடன் பிரார்த்திக்கின்றோம்.
பகவானே தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருணைகாட்ட வேண்டும். என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் அசுர சகோதரர்கள் பெற்றனர். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று அசுரர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்டுக் கொண்டனர்.
வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்குவாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும் போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்துசெய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி விரதம்
இவ்வுத்ஸவத்தின் 22 நாள்களும் உபயதாரர்களை கொண்டு நடைபெற இருப்பதனால் ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதனை ஏற்று நடத்தி,செங்கண் திருமுகத்து செல்வ திருமாலால் எங்கும் திருவருள்
பெற்றுய்ந்திட வேண்டுமாய் பக்த மஹா ஜனங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம்.
* ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடவேண்டும்
* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
* ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பட்டினியாக இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம் . ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம் .
* முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.
* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம் .
* துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
* நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
விரதம் இருப்பவர்கள் அனைத்து உடல் நலத்துடனும், ஆரோக்கியத்துடனும், சகல பாக்கியங்களும் பெறுவார்கள்.