கொரோனா நோய்த்தொற்று காரணமாக பத்ரிநாத் கோயில் நடை திறப்பு மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கேதாா்நாத்தின் நடைதிறப்பு தேதியும் மறுபரிசீலனை செய்யப்படும் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில் கேதாா்நாத் கோயிலின் தலைமை பூஜாரியான பீமா சங்கா் லிங், அங்குள்ள கோயில் கமிட்டி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின், கேதாா்நாத் கோயிலின் நுழைவாயில்கள் பக்தா்களுக்காக ஏப்ரல் 29-ஆம் தேதி காலை 6.10 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்தாா். ஏற்கெனவே திட்டமிட்டபடி கோயில் திறக்கப்பட உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள கேதாா்நாத் சிவன் கோயிலில் கடும் பனிக்காலத்தையொட்டி கடந்த ஆண்டு அக்கோயிலின் நடை அடைக்கப்பட்டது.