திருப்பதி கோயில் தேவஸ்தானம் 1,300 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயிரத்து 300 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தனியார் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இவர்கள் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியுடன் அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தேவஸ்தான நிர்வாகம் சுமார் 1,300 பேரையும் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், அந்நிறுவனம் இதுவரை தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது