திருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்

0
9

திருப்பதி தேவஸ் தானத்தின் மீது, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது.

கொலை பற்றி படிக்க  : மீண்டும் ஒரு இந்து சாது படுகொலை | Once again a Hindu Sadhu massacre

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்களை, பகிரங்க ஏலம் மூலம் விற்க, தேவஸ்தானம், கடந்த வாரம், ‘நோட்டீஸ்’ வெளியிட்டது. அதற்கு, தெலுங்கு தேசம், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், ‘இந்த நிலங்களின் ஆய்வறிக்கை, தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்த போது நடத்தப்பட்டது; இதுபோல் பயன்படாமல் இருக்கும் நிலங்களை, அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி விற்கும் உரிமை, தேவஸ்தான சட்டத்தில் உள்ளது’ என, அறங்காவலர் குழு தெரிவித்தது.

இந்நிலையில், பகிரங்க ஏலம் நடத்த எதிர்ப்பு அதிகரித்ததால், நேற்று முன்தினம் மாலை, தேவஸ்தான நிலங்களை விற்க, ஆந்திர அரசு தடை விதித்தது. நில விற்பனையை எதிர்த்து, ஆந்திராவின் அனந்தபுரத்தை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகி அமர்நாத், உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை, இன்று நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here