பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து, மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி மற்றும் ஊழியர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தினார். கணபதிஹோமம் நடைபெறும். தொடர்ந்து உஷபூஜை, பிரதிஷ்டை தின சிறப்பு உச்சபூஜை முடிந்து 10:00 மணிக்கு நடை அடைக்கும்.மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தீபாராதனை, அத்தாழபூஜைக்கு பின்னர் இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.