திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (ஜூன் 26) முதல் நாளொன்றுக்கு மேலும் 3000 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தற்போது வரை திருப்பதி கோவிலில் நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு இறைவனை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில் 6000 பேருக்கு ரூ 300 /- தரிசன டிக்கெட்டு வழங்கப்படுகிறது. மீதி 3000க்கும் அதிகமான பக்தர்கள் இலவச தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாளை ஜூன் 26 முதல் இம்மாதம் கடைசி வரை ரூ 300 தரிசன டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை மேலும் 3,000 அதிகரிக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளொன்றுக்கு 12,750 பேர் தரிசனம் செய்யமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.