கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுடன், கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் வரும், சிறிய திருக்கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் வழிபாட்டு தலங்களில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.