பனி வடிவில் அமர்நாதில் (Amarnath) குடிகொண்டிருக்கும் பரமேஷ்வரனின் பக்தர்களுக்கு (Devotees) நற்செய்தி. அமர்நாத் புனித யாத்திரை (Pilgrimage) ஜூலை 21 (July 21) முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீடின் LG ஜி.சி முர்மு சிவபெருமானுக்கு வழக்கமான பூஜைகளை செய்தார். இதையடுத்து, அமர்நாத் சிலலிங்கத்தின், இவ்வாண்டின் முதல் காட்சிகள் வெளி வந்துள்ளன. இதுமட்டுமல்ல, இம்முறை சிவபெருமானே பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க பக்தர்களின் இல்லங்களுக்கே வருகிறார். இன்று முதல் அமர்நாதின் புனித குகையில் தீபாராதனை ஆரதி மற்றும் பிற பூஜைகள் துவங்கி விட்டன. இது முதன்முறையாக தூர்தர்ஷனில் (Doordarshan) ஒளிபரப்பப்பட்டது.
அமர்நாத் புனித யாத்திரைக்கான ஏற்பாடுகளை நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் படி:
கோயிலுக்குள், அதாவது இந்த புனித குகைக்குள் தரிசனத்திற்கு ஒரு நாளில் 500 பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வெளியிலிருந்து வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு வரவேண்டும்.
பரிசோதனை முடிவு எதிர்மறையாக வரும்வரை, பக்தர்கள் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் இருக்க வைக்கப்படுவார்கள்.
55 வயதுக்கு குறைவாக பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஹெலிகாப்டர்களை முன்பதிவு செய்வது குறித்து இன்னும் எதுவும் முடிவெடுக்கப்படவில்லை.
ஆன்லைன் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படலாம்.
ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலர் பி.வி.ஆர் சுப்பிரமணியம், இந்த யாத்திரை குறித்த ஏற்பாடுகளை செய்து பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அவர், வேல்ப்லிக் நீல்க்ரத் சாலை வழி முதல் பால்டால் வரை நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். யாத்திரை சாலையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நிர்வாகம் பிபிஇ கிட்டுகளையும் தேவையான மற்ற வசதிகளையும் செய்துள்ளது. இவ்வாண்டு அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 23 அன்று துவங்கவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக இது தாமதிக்கப்பட்டது.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....