தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் மூலம் இந்து மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு இருப்பது சமூக வலைத்தளங்களில் வலம்வரும் வீடியோக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம், இணையத்தில் இந்து கடவுள்களை இழிவாக பேசியவர்களை கண்டித்து வரும் அதேவேலையில், பொது வெளியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாலை விரிவாக்க பணிகளை காரணம்காட்டி தமிழகத்தில் பல கோவில்கள் அகற்றப்பட்டுள்ளன, சில இடங்களில் பொதுமக்கள் வீதியில் இறங்கவே அது மாறிய வரலாறும் உண்டு அப்படி ஒரு சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது,
திருச்சி மாவட்டத்தில் 95 வருட பாரம்பரியமான ஸ்ரீரங்கம் மாம்பலச்சாலை யில் உள்ள வீர ஆஞ்சிநேயர் கோயிலை அப்பகுதி மக்களிடம் புரிந்துணர்வு ஏற்படாத நிலையில் இடிக்க வந்த ஹைவே டிபார்ட்மென்ட்டை தடுத்து நிறுத்தியது இந்துமுன்னணி மற்றும் இந்து அமைப்புகள் !
இதனையடுத்தி அங்கு உடனடியாக இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி போராட்டத்தில் இறங்கினர், இதனையடுத்து வட்டாச்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தபட்டது, போராட்டத்திற்கு முன்னர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி கோவிலுக்கு மாற்று இடம் வழங்கப்படாது என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இந்துக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் இறங்கியதை அடுத்து உடனடியாக கோவிலுக்கு அருகில் மாற்று இடம் வழங்கப்பட்டதுடன், சேதம் இன்றி மாற்றி தருவதாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, முன்பெல்லாம் எங்கோ ஏதோ நடக்கிறது, என இருந்த மக்கள் தற்போது வீதிக்கு வந்து போராட்டத்தில் இறங்குவது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதே போன்று வரும் தேர்தலில் இந்துக்கள் ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் என சில அரசியல் இயக்கங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 24 மணி நேரத்திற்குள் கோவிலுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது