அயோத்தியில், ராமர் கோயிலின் (Ram Temple) கட்டுமானம் அடுத்த மாதம் துவங்க வாய்ப்புள்ளது. அதற்கான “பூமி பூஜை” (Bhoomi Pooja) நடத்த பிரதமர் நரேந்திர (Prime Miniser) மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா (Shri Ram Janmabhoomi Teerth Kshetra) அறக்கட்டளையின் கூட்டத்தில் கோயில் கட்டுமானத்திற்கான தற்காலிக திட்டம் முடிவு செய்யப்படலாம் என்று சம்பந்தப்பட்ட ஆதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி, ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவின் போது, கோயிலுக்கான பூமி பூஜையை செய்ய வருமாறு அவரை அழைத்துள்ளார்” என்று அறக்கட்டளை தலைவரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நயன் தாஸ் தெரிவித்தார்.
எனினும், இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கலந்துகொள்வாரா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஜூலை 18 கூட்டத்திற்குப் பிறகு இது தெளிவாகலாம் என்றும் அவர் கூறினார்.
பூமி பூஜையின் போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலாளரும் கோயில் அறக்கட்டளையின் கட்டுமானக் குழுவின் தலைவருமான நிருபேந்திர மிஸ்ரா வியாழக்கிழமை அயோத்திக்கு சென்றார். அவருடன் ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் பாதுகாப்பு ஆலோசகரும் பி.எஸ்.எஃப்-ன் முன்னாள் இயக்குனருமான ஜெனரல் கே.கே.ஷர்மா உடனிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி அமைக்கப்பட்ட ராமர் கோயில் அறக்கட்டளையின் பல்வேறு உறுப்பினர்களை இவர்கள் சந்தித்தனர்.
இங்குள்ள சர்க்யூட் ஹவுஸில் உள்ளூர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர்கள் அனில் மிஸ்ரா மற்றும் பிம்லேந்திர மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆயினும், அயோத்தியில் வசிக்கும் அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் மற்றும் உறுப்பினர் மஹந்த் தினேந்திர தாஸ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில் அயோத்தி (Ayodhya) பாஜக எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, ராமர் கோயில் கட்டுமானத்தை துவக்கி வைக்க பிரதமரை அயோத்திக்கு அழைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.