கொரோனா பரவலையொட்டி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில், ஒரு வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை மட்டும் நிறுவுமாறு மும்பை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
வரும் ஆக்.,22ம் தேதி முதல் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படு உள்ளது. இந்நிலையில், விழாவை எப்போதும் சிறப்பாக கொண்டாடும் மும்பையில், ‘ஒரு வார்டு; ஒரு சிலை’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சியின் உதவி கமிஷனர் கூறியதாவது: மும்பையில் ஒரு வார்டில் ஒரு சிலை வீதம் நிறுவி கொள்ளலாம். விநாயகரின் சிலைகள், 4 அடிக்குள் இருக்க வேண்டும். இந்த விநாயகர்களை விசர்ஜனம் செய்ய, செயற்கை நீர்நிலைகள் ஏற்படுத்தப்படும். அங்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அங்கு மட்டுமே சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும்.
கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யவும் உரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.