உலகம் முழுதும் இருந்து, இரண்டு கோடி ஹிந்துக்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி, இணையதளம் வாயிலாக, வரும், 26ல், சஷ்டி திதியன்று நடக்க உள்ளது.
‘வாழும் கலை’ அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக, அன்றாடம் பிரார்த்தனைகளில், பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குணமடையவும் கந்த சஷ்டி கவசம் உதவி செய்கிறது.
இதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மக்கள் நோய் நொடியில் இருந்து விடுபடவும், இரண்டு கோடி மக்கள் பங்கேற்கும், கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி, வரும், 26ல், சஷ்டி திதியன்று இணையதளம் வாயிலாக நடக்கிறது.’வாழும் கலை’ அமைப்பு நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமை வகிக்கிறார். சமூக ஊடகங்கள் வழியாக, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது, மிக பிரமாண்ட ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக நிகழவிருக்கிறது. இதில் இணைய விரும்புவோர், ‘பேஸ்புக் லைவ்’ bit.ly/FBKavacham, ‘யூ டியூப் லைவ்’ bit.ly/YTKavacham ஆகிய முகவரிகளை டைப் செய்து, உள்ளீடு செய்து நுழையலாம். விபரங்களுக்கு, வாழும் கலை அமைப்பு பிரதிநிதிகள், தாஸ், 94433 56249, வெங்கடேஷ் 94433 70608 ஆகியோரின் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....