ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார்.
மேஷம்
உங்கள் பணிக்கு ஏற்ற பாராட்டுகள் இன்று கிடைக்கும். அது உங்களை மேலும் மகிழ்ச்சியாக்கும். மேலும் பாதுகாப்பாக உணர வைக்கும். உங்களுக்கு கிடைக்கும் மரியாதையால், சில புதிய நட்புகள் உருவாகும். அதனால் உங்களுக்கு சில பயன் உண்டு.
ரிஷபம்
இன்னமும் உங்களைச் சுற்றி பிரச்சனைகள் வட்டமிடும். இதனால், உங்கள் மன நிம்மதி கெட்டு, அதனால் உங்களது எதிர்கால திட்டங்கள் கூட பாழாகலாம். அடுத்த வாரத்தில், உங்களுக்கு நிகழ்ந்த அதிசய சம்பவங்களை உட்கார்ந்து மணிக் கணக்கில் பேசலாம். அந்தளவிற்கு சில சங்கடங்கள் காத்திருக்கிறது.
மிதுனம்
அடுத்த சில நாட்கள் உங்களுக்கு கடுமையானதாக இருக்கும். அதற்காக, சோதனைகளை கண்டு அஞ்சி ஓடிவிடக் கூடாது. நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம் உபயோகமே. இந்தக் காலத்தில் உங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம்.
கடகம்
நீங்கள் கவலையாக காணப்படுவீர்கள். அதற்காக எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம். தேவையில்லாமல் தலையை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எது நடக்குமோ அது நிச்சயம் நடக்கும்.
சிம்மம்
எப்பவுமே தீவிரமாக யோசிப்பதால், நிறைய திட்டங்களை கையில் வைத்திருப்பீர்கள். ஆனால், முதலில் எதை அமல்படுத்துவது என்பதில் பெரும் குழப்பம் உங்களிடையே நிலவும். எதுவாக இருந்தாலும், உங்களுக்கென்று தனி நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
கன்னி
வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் நிறைவான மனநிலை நிகழும். பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். மனைவியின் அன்பு அதிகரிக்கும்.
துலாம்
காலம் கனிந்து ஏற்படும் மனமாற்றம் உங்களுக்கு நன்மையும் பயக்கும், தீமையும் பயக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். எந்த வேலையையும் தள்ளிப்போடாமல் செய்தால் உங்களது வெற்றி ஓரளவிற்காவது உறுதி செய்யப்படும்.
விருச்சிகம்
அடுத்து சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் காலம் இது. உங்கள் குடும்பத்தை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மகிழ்வார்கள். உங்களது சில நடவடிக்கைகளால் ஏமாற்றங்கள் இருந்தாலும், இறுதியில் வெற்றி கிட்டும் என நம்பலாம்.
தனுசு
நீங்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதர்களை கடந்து வந்தாலும், உங்கள் வேலை என்ன என்பதை புரிந்து வைத்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் விதி உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தும், அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.