ஈஷா அறக்கட்டளைக்கு, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு, அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது. உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சத்குரு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் பேரவையில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பூமிக்கு புதிய சுற்றுச்சூழல் விதியை விழிப்புணர்வாக படைப்பதற்கான நேரமிது. ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டங்களை பலப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.