இந்துக்களின் 500 ஆண்டுகால கனவு வருகிற 5 – ம் தேதி நிறைவேற இருக்கிறது, உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற இராம ஜென்ம பூமி வழக்கில் அயோத்தியில் இராமர் கோவில் கட்டி கொள்ளலாம் எனவும், இராமர் கோவில் பொறுப்பை அரசு மற்றும் அறங்காவலர்கள் குழு நடத்த வேண்டும் என தீர்ப்பு அளித்தது.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடி வருகிற ஆகஸ்ட் 5 -ம் தேதி அடிக்கல் நாட்ட இருக்கிறார், இதில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது, இந்த நிலையில் இராமர் கோவில் வழக்கு நீண்ட காலமாக விசாரணை நடைபெற்றதற்கு காரணம் அவ்விடத்தை பற்றிய மூல காரணம் மற்றும் புராதான சின்னங்கள் அளிக்கபட்டதே, நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகே அங்கு மசூதிக்கு முன்பே கோவில் இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதனால்தான் நீதிமன்றம் அங்கு இராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது, தற்போது இது போன்ற பிரச்சனைகள் எதிர் காலத்தில் அமையாமல் இருக்க மேலும் இராமர் வரலாறை எதிர்காலத்தில் சிலர் வேண்டுமென்றே திரித்து கூறாமல் இருக்க இராமர் தொடர்பான வரலாற்று ஆவணங்கள், வழக்கு தீர்ப்புகள், பூஜை முறைகள் அனைத்தையும் சேர்த்து 2000 அடி ஆழத்தில் இராமர் கோவில் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு கீழே டைம் கேப்ஸுல் வைக்க முடிவு எடுக்கபட்டுள்ளது.
இதன் மூலம் எத்தனை ஆண்டு காலம் கழித்தும் வரலாற்றை யாரும் மாற்ற முடியாத வகையில் தரமான உலோகத்திற்கு உள்ளே அனைத்து ஆவணங்களும் வைக்கப்பட்டு நிலத்திற்கு அடியில் வைக்கப்படும்.
ஆகஸ்ட் 5 அன்று மற்றொரு தீபாவளியை கொண்டாட நாடு முழுவதும் உள்ள மக்கள் தயாராகி வருகின்றனர்.
மும்மொழிக் கொள்கை போராட்டம் – ஒரு வரலாற்றுப் பார்வை மொழி என்பது ஒரு சமூகத்தின் அடையாளமே மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, பண்பாடு, உணர்வுகள்...
ஸ்ரீ ராமநவமி 2025 – வழிபாட்டு முறைகள், சிறப்பு உணவுகள் மற்றும் மந்திர ஜபம் ஸ்ரீ ராமநவமி என்பது ஹிந்து சமயத்தில் மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது....
நித்தியானந்தா இன்று அதிகாலையில் யூடியூப் நேரலை மூலம் தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். இந்த நேரலை, சமீப காலமாக அவரைப் பற்றிய பல்வேறு செய்திகள் பரவி வந்த சூழ்நிலையில்...
கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரியில் 50,000 பெண்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு கர்மயோகினி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை) கன்யாகுமரியில்...
பண்டைய காலத்தில் நிடத நாட்டின் நீதியமைந்த மன்னனாக நளன் இருந்தான். அவரது பெருந்தன்மை, வீரத்தன்மை, அறிவு, அறிமுகமான கட்டுப்பாடு ஆகியவற்றால் நாட்டின் மக்கள் அவரை அன்புடன் கொண்டாடினார்கள்....