சாம்பிராணி என்பது பிரங்கின்சென்ஸ் (Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் ஆகும். இது பாஸ்வெல்லியா செர்ராட்டா (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மிக மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுமுடைய சாம்பிராணியாக மாறுகிறது.
சாம்பிராணி, குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை, பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இச்சாம்பிராணியை எரித்தால் மிகுந்த மணத்தைப் பரப்பும். சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது. சாம்பிராணி மரம் உறுதியானது. எனினும் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுகின்றன. ஆண்டு ஒன்றிற்கு 1 கி.கி வரையில் ஒரு மரத்திலிருந்து சாம்பிராணி பெற முடியும்.
வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ நிவாரணியாக செயல்படுவது சாம்பிராணி .
சாம்பிராணி நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்களுக்கு உரியது எனவே வீட்டில் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வந்தால் தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள். கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம். ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்.
கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும். வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும், வீண் சண்டை, அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும். பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும்.