கந்த சஷ்டியை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப் அமைப்பு வெளியிட்ட வீடியோவுக்கு, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிவனடியார்கள், ஆதீனங்கள், மற்றும் இந்து மதத்தை சேர்ந்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து, கந்த சஷ்டி கவசத்தின் மீது, பக்தர்கள் கூடுதல் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்து மதம் சார்ந்த பல்வேறு ஆன்மீக அமைப்புகளும், கந்த சஷ்டி கவசம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. கந்த சஷ்டியை இழிவுபடுத்திய, கருப்பர் கூட்டம் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், வெற்றிவேல் வீரவேல் என்ற வரிகளும் பிரபலமாயின. இதனிடைய, நடிகர் சிவாஜி கணேசன் நடித்து, 1967ல் வழிவந்த கந்தன் கருணை திரைப்படத்தில் இடம்பெற்ற வெற்றிவேல் வீரவேல், சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல் எனும் பாடல், மொபைல் போன்களில் ரிங் டோனாக பயன்படுத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. 53 ஆண்டுக்கு முன் வெளியான திரைப்படத்தின் பாடல்கள், நீண்ட காலத்துக்குப் பின், மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பர் கூட்டம் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெற்றிவேல் வீரவேல் ரிங் டோன், பல்வேறு தரப்பினராலும், வாட்ஸ் அப் மூலம் பகிரப்பட்டு வருகிறது.
Facebook Comments Box