அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் பாதுகாப்புக்காக இளம் வயது போலீசாரை பயன்படுத்த உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
வரும் ஆக்ஸ்ட்5 ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உ.பி., மாநில தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில தலைமச் செயலாளர் ஆர்.கே.திவாரி மற்றும் கூடுதல் செயலாளர் ஆவானிஸ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு 45 வயதிற்கும் குறைவான கொரோனா பாதிப்பு இல்லாத தனிமைப்படுத்துதலில் உள்ள போலீசாரை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.