உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ஹிந்துக் கடவுள், ராமருக்கு கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை நடக்க உள்ளது. இந்நிலையில், ராமரின் தாயான, கவுசல்யாவுக்கு, சத்தீஸ்கரில் மிகப் பெரிய கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே, ராமரின் தாய் கவுசல்யாவின் கோவில் உள்ளது. ஏற்கனவே உள்ள கோவில், தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது. கோவில் வளாகத்தை புதுப்பித்து அழகுபடுத்த, காங்கிரசை சேர்ந்த மாநில முதல்வர், பூபேஷ் பாஹெல் உத்தரவிட்டுள்ளார்.
ராமர் வனவாசம் இருந்த போதும், சத்தீஸ்கரின் பல பகுதிகள் வழியாக சென்று உள்ளதாக, புராண கதைகள் கூறுகின்றன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட, ஒன்பது இடங்களை, சுற்றுலா தலங்களாக்க, ஏற்கனவே மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கவுசல்யா பிறந்த, சத்தீஸ்கரில் உள்ள அவருடைய கோவிலை புனரமைக்க, முதல்வர், பூபேஷ் பாஹெல் உத்தரவிட்டுள்ளார்.
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...