இன்று ஆவணி அவிட்டம் என்னும் இந்த மத சடங்கு பல தரப்பு இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இந்து மதத்தை சேர்ந்தவர்களில், முப்புரிநூல் என்றும் அழைக்கப்படும் பூணூல் மாற்றுவார்கள்.
ஆடி மாதம் தானே இன்று? ஆவணி அவிட்டம் என்று ஏன் அழைக்கப்படுகிறது தெரியுமா?
ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கானது, உபநயனம் செய்து கொண்டவர்கள் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் சடங்காகும்.
இந்து மதத்தில் ரிக்,யசுர் வேதங்களை பின்பற்றுபவர்கள் அனுசரிக்கும் சம்பிரதாயம் இது. சாம வேதத்தை கடைபிடிப்பவர்கள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய முன்னோர்களுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வார்கள். தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தாங்கள் கற்ற வேதங்களை பாராயணம் செய்வார்கள்.
சமஸ்கிருத மொழியில் உபாகர்மா என்பதன் பொருள் தொடக்கம் எனபதாகும். இன்றைய தினம் கல்வி கற்கத் தொடங்குவதற்கு சிறந்த நாளாகும். காயத்ரி மந்திரத்தை இன்று பாராயணம் செய்வார்கள்.
இன்று சகோதர சகோதரிகள் தங்கள் உறவை உறுதிப்படுத்திக் கொள்ளும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. மணிக்கட்டியில் கயிற்றைக் கட்டி பாசப் பிணைப்பை உறுதியாக்கும் பண்டிகை ரக்ஷா பந்தன் என்றால், ஆவணி அவிட்டம் என்னும் இந்த சம்பிரதாயம், இந்து மதத்தை சேர்ந்த சில பிரிவு ஆண்கள், தங்கள் முப்புரி நூலை மாற்றும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
நூலே மனிதர்களை என்றென்றும் பின்னி பிணைக்கும் கண்ணியாக அந்நாள் முதல் இந்நாள் வரை எந்நாளும் தொடர்கிறது. ரக்ஷா பந்தனில் மனித உறவு என்னும் கண்ணி பலப்படுத்தப்படுகிறது. கல்வி என்னும் கடலை, நூல் என்னும் கருவியால் மனிதனுடன் பிணைக்கப்படும் நாள் ஆவணி அவிட்டம்….
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...