அயோத்தியில் ராமர் கோயில் வடிவில் ரயில் நிலையம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை மறுநாள் (ஆக.,05) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், அயோத்தி ரயில் நிலையத்தை ராமர் கோயில் வடிவத்திற்கு மாற்றியமைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்ட இந்த ரயில் நிலையத்தை மாற்றியமைக்க ரயில்வே பட்ஜெட்டில், ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.104 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அயோத்தி ரயில் நிலையத்தை மாற்றியமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கான மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அயோத்தி ரயில் நிலைய முதற்கட்ட மறுசீரமைப்பு பணிகள் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என வடக்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலைய வளாகத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை சரிசெய்தல், டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், காத்திருப்பு அறைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், ஆண்கள் தங்குமிடம், 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம் ஆகியவை கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...