‘ராமர் கோவில் கட்டப்படுவதன் மூலம் ராம ராஜ்ஜியம் நாட்டில் நிறுவப்படும். நாட்டில் கலாச்சாரம், நிதியியல், அரசியல் விவகாரத்தின் ஆக்ரமிப்புகள் முடியும். ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும்’ என, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
ராமஜென்ம பூமியில் பூஜைக்காக வந்திருக்கும் பாபா ராம்தேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த ஆக., 5ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க நாள். பல தலைமுறைகள் பெருமையுடன் இந்த நாளை நினைவுகூரும். புதிய வரலாறு படைத்த இந்தத் தினத்தை கொண்டாட வேண்டும். உலகம் முழுதுமே இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலக ஒற்றுமை என்ற செய்தியை அறிவிக்கும் வரலாற்றுத் தினம் இது.
நாமெல்லாம் ராமர் கோவில் பூமி பூஜையைப் பார்க்க வாய்த்திருப்பது இந்தியாவின் மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த நாட்டில் ராம ராஜ்ஜியம் நிறுவ, பதஞ்சலி யோக பீடம் அயோத்தியில் பெரிய குருகுலம் தொடங்கும். அதில் உலகெங்கிலிருந்தும் வருபவர்கள் வேதம், ஆயுர்வேதம் கற்பார்கள்.
ராமர் கோவில் கட்டப்படுவதன் மூலம் ராம ராஜ்ஜியம் நாட்டில் நிறுவப்படும். நாட்டில் கலாச்சாரம், நிதியியல், அரசியல் விவகாரத்தின் ஆக்ரமிப்புகள் முடியும். ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும்.
நரேந்திர மோடியைப் பிரதமராக அடைய நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். அவரே ராம, ஹனும பக்தர். இந்து தர்மத்துக்கு பெருமை பிரதமர் அவர்.
முருகப்பெருமானின் பக்தி வழிபாட்டில் முக்கியமான தைப்பூசத் திருவிழா தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தமிழ் மாதமான "தை"-யில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி...
1990 ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் காடையர்களால் நாளுக்கு நாள் மட்டக்களப்பு அம்பாறை வாழ் தமிழ் சமூகங்களுக்கு எதிரான வன்முறைகள் கொலைகள் என்று அதிகரித்து கொண்டே இருந்தது அந்த...
128 வயது பழக்கப்பட்டு, கும்பமேளாக்களில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சுவாமி சிவானந்த பாபாவின் வாழ்க்கை பலர் நம்ப முடியாத அதிசயங்களின் தொகுப்பாக உள்ளது. அவர் வாழ்க்கை முறையும்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...