ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, குஜராத்தை சேர்ந்த, ஆன்மிக தலைவர், மொராரி பாப்பு, உலகம் முழுவதிலும் உள்ள தன் ஆதரவாளர்களிடம் இருந்து, 18.61 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார்.
குஜராத்தை சேர்ந்தவர், மொராரி பாப்பு. ஆன்மிக தலைவரான இவர், தன், 14வது வயதில் இருந்து, ராமாயண சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இவருக்கு, உலகம் முழுதும், ஆதரவாளர்கள் உள்ளனர்.ராமஜென்ம பூமி விவகாரத்தில், ‘ராமர் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவர், ஒட்டுமொத்த உலகுக்கும் சொந்தமானவர்’ என்ற கருத்தை வலியுறுத்தினார்.
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, 5 கோடி ரூபாய் நிதி அளிக்க விரும்புவதாக தெரிவித்த மொராரி பாப்பு, உலகம் முழுவதும் உள்ள, தன் ஆதரவாளர்களிடம், நிதி திரட்ட துவங்கினார். இந்தியாவில் இருந்து, 11.30 கோடி ரூபாய் நிதி திரண்டது. அதை, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கி கணக்கில், நேற்று ஒப்படைத்தார்.
மேலும், ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் இருந்து, 3.21 கோடி ரூபாயும், அமெரிக்கா, கனடா மற்றும் இதர நாடுகளில் இருந்து, 4.10 கோடி ரூபாயும் திரட்டப்பட்டது.’வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கான முறையான அனுமதி கிடைத்த பிறகு, அந்த தொகை, அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம் இன்றைய சமூக அமைப்பு மாறிவரும் உலக அரசியல், பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களால்...
அன்னிய மோகத்தால் சீரழியும் ஹிந்து குடும்ப அமைப்பும், அதை மீட்கும் வழியும் அறிமுகம்: இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. மனிதன் வாழ்வில் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன்...
திருவாங்கூர் சமூக வரலாறு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை: விரிவான ஆய்வு பெருமைமிகு திருவாங்கூர் மண்டலம்:திருவாங்கூர் மண்டலம் என்பது 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி...
பாரத சுதந்திர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டம் மிகவும் நீண்ட காலம் நடந்தது. இது மூன்று முக்கிய கட்டங்களாக வகுக்கப்படுகிறது: முதல் கட்டம்: தொடக்கப் போராட்டங்கள் (1857...
திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயத்தின் அமைப்பு சோழர் மற்றும் பல்லவர் கால கட்டமைப்புகளை பிரதிபலிக்கிறது....
2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வெற்றி மற்றும் சர்வதேச பாராட்டுகள் 2024 ஆம் ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டது. கடந்த...