அயோத்தியில், தடைகளை கடந்து பிரம்மாண்ட ஸ்ரீ ராமர் கோவில் கட்டப்படுவதற்கு, காமாட்சிபுரி ஆதீனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, மற்றும் பூமி பூஜை, நடந்தது.
வரலாற்று சிறப்புமிக்க இது குறித்து, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமி கூறியதாவது:ஆன்மிக பண்பாட்டுக்கு உரிய அயோத்தி ராமர் கோவில் அமைய, எண்ணற்றோர் அரும்பாடுபட்டுள்ளனர். பல்வேறு தடைகளை கடந்து, பிரம்மாண்டமான கோவில் கட்ட, பிரதமர் மோடியின் முயற்சியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு, நாடு முழுவதும் பக்தர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் ஆன்மிகப் பெரியோர் என அனைவரும் வாழ்த்து தெரிவிக்க வேண்டியது அவசியம். பிற மதத்தினரும் தங்களது அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஸ்ரீ ராமபிரானுக்கு அவர் வாழ்ந்த இடத்தில் கோவில் அமைய காரணமாக இருந்தவர்களுக்கு, நன்றி தெரிவிக்க வேண்டியது நம் கடமை.இவ்வாறு அவர் கூறினார்.