மாநகராட்சி பகுதிகளில் சிறிய வழிபாட்டு தலங்களை நாளை மறுநாள்(ஆக., 10) முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் இபி.எஸ்., தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:ரூ.10 ஆயிரத்திற்கும் வருமானம் குறைவாக உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க, சென்னையில் மாநகராட்சி கமிஷனரிடமும், மற்ற மாவட்டங்களில் கலெக்டர்களிடமும் அனுமதி பெற வேண்டும். தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்
Related